[X] Close

முடிவு தெரியாமல் வரமாட்டோம்: தங்க தமிழ்ச்செல்வன்

We-do-not-come-out-from-result-without-knowing-the-governor-s-decision-says-Thanga-Tamilselvan

ஆளுநரிடம் கொடுத்துள்ள கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை என்பது தெரியாமல் விடுதியை விட்டு வர மாட்டோம் என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அமைய காரணமாக இருந்த தங்களை அழைத்துப்‌ பேசவில்லை என டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். புதுச்சேரி சின்ன‌வீராம்பட்டினத்தில் உள்ள விடுதியில் கடந்த 4 நாட்களாகத் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் இன்று சென்னை-கடலூர் நெடுஞ்சாலையிலுள்ள நட்சத்திர விடுதிக்கு மாறியுள்ளனர். அந்த விடுதியில் செய்யப்பட்ட மு‌ன்பதிவு காலம் முடிந்து விட்டதால், இடம் மாறியுள்ளதாக தெரிவித்தனர். தற்போது மாறியுள்ள விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை நாட்கள் தங்கியிருப்பது என்று முடிவெடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், நல்ல முடிவு தெரியாமல் விடுதியை விட்டு வருவதாக இல்லை எனக் கூறியுள்ளார். அதேபோல், 10 சட்டமன்ற உறுப்பினரை வைத்துள்ள ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close