Published : 24,Dec 2021 09:11 PM

சென்னை: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் - போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

Chennai-Bribery-of-a-lorry-driver-Transport-Assistant-Inspector-transferred

பூவிருந்தவல்லி போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றும் ராஜன் என்பவர் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலையில் போக்குவரத்து பணியில் இருந்தபோது லாரி ஓட்டுநரிடம் 100 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வெளியாகியுள்ளது.

தன்னிடம் கொடுத்தால் 100 ரூபாய் ஆன்லைனில் கட்டினால் 800 ரூபாய் என மிரட்டி பணம் வாங்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. அதேபோல் '’நான் சொல்றத கேட்டா எனக்கு சந்தோஷம்; நீ சொல்றத கேட்டா உனக்கு சந்தோஷம்’’ என டயலாக் பேசி அடுத்தடுத்து மூன்று பேரிடம் லஞ்சம் வாங்கும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

image

அதேபோல் லாரி உரிமையாளர்கள் எஞ்சின் ஸ்பேர் என 10 ஆயிரம், 20 ஆயிரம் செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் கேட்கும் 100, 50-க்கு கணக்கு பார்ப்பார்கள் என புலம்பியபடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்குவதை லாரி ஓட்டுநர் ஒருவர் அவரது செல்போனில் பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

image

இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை சென்னை மேற்கு மாவட்ட போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து வீடியோ காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்