Published : 19,Dec 2021 12:06 PM

சென்னை: பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - ஆசிரியர்கள், உறவினர்களிடம் தீவிர விசாரணை

Teachers-and-relatives-of-a-schoolgirl-who-committed-suicide-in-the-suburbs-of-Chennai-are-under-serious-investigation
சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஆசிரியர்கள், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
மாணவியின் செல்போனை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அவர் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடிதத்தில், முன்னாள் ஆசிரியரின் மகன் காரணம் எனக் குறிப்பிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை பிடித்து, காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று உடற்கூறு ஆய்வு முடிந்து, மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்