முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள,இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சரை சந்தித்து பேசினார்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இந்த போக்கை மாற்றி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கை, சமூக நீதி மற்றும் மனித வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் குறிப்பாக பெண்களுக்கான சம வாய்ப்பு, பின்தங்கிய மக்களின் நலன் தொடர்பான தங்களது பொதுவான பரிந்துரைகளை வழங்கும் என்றும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மாநில உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்தும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், கொரோனா பாதிப்பால் தமிழக பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்து, இதுவரை 2 முறை இந்த குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்தும், பொருளாதார நிலையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கான நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைப்படிக்க...ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபரால் பரபரப்பு
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?