[X] Close

'திரையாளுமையால் மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள்' - ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு

stalin-wishes-to-rajinikanth-on-his-birthday

'தன்னிகரற்ற திரையாளுமையால் தமிழ் மக்களை மகிழ்விக்க வாழ்த்துகள்' என நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதையொட்டி, பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிர வைத்த ரஜினியின் காவி பேச்சு... அதிர்ந்து போன பாஜக... குஷியில் மு.க. ஸ்டாலின்..!


Advertisement

அதில், ''உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close