Published : 11,Dec 2021 05:59 PM
ரூ. 3 கோடி நிதி மோசடி: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்

செக் மோசடி, அனுமதியின்றி உபகரணங்கள் வாங்கியதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மல்டி மீடியா மையத்திற்கு தணிக்கைத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
மத்திய தணிக்கைத்துறை ஒவ்வொரு அரசுத்துறையையும் ஆண்டுதோறும் தணிக்கை செய்வது வழக்கம். அதில், 2012 முதல் 2020 வரையிலான அறிக்கையை கடிதம் வாயிலாக பல்கலைக்கழக பதிவாளருக்கு நவம்பர் மாத இறுதியில் அனுப்பியிருக்கின்றனர். அதில், ரூ.3 கோடி அளவிற்கு செக் மோசடி, அனுமதியின்றி உபகரணங்கள் வாங்கியதாகவும் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2017க்குப் பிறகு அனுமதியை புதுபிக்காதது ஏன் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் தரவேண்டும் எனவும் தணிக்கைத்துறை தெரிவித்திருக்கிறது.