[X] Close

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

Chief-Minister-MK-Stalin-paid-floral-tributes-to-the-body-of-Brigadier-General-Pipin-Rawat--who-died-in-a-helicopter-crash-
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 
குன்னூர் அருகே நேற்று நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
 
இந்நிலையில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். துக்கத்தை அனுசரிக்கும் விதமாக அவர் கருப்புத் துண்டு அணிந்திருந்தார். மதியத்திற்கு மேல் இறந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

Advertisement

Advertisement
[X] Close