Published : 02,Dec 2021 10:00 PM

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக இருக்கும் புயலுக்கு ஜவாத் என்று பெயர் சூட்டிய சவுதி

Depression-in-the-Southeastern-Bay-of-Bengal-Indian-Meteorological-Department

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 960 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவில் இருந்து 1060 கிலோ மீட்டர் தெற்கு தென் கிழக்கு திசையிலும் தற்போது நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

image

அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்படும். இது சவுதி அரேபியாவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்.

'ஜவாத்' புயல் உருவாக‌‌‌‌ உள்ளதால் அரக்கோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்துள்ளனர்.‌‌‌‌ அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு ஜவாத் எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்தப் புயல், ஆந்திராவின் வடமேற்கே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்திலிருந்து 20 பேர் கொண்ட நான்கு குழுக்கள் ஆந்திராவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 12: Friends2Support - ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்