Published : 02,Dec 2021 07:44 AM

வங்கி ஊழியர்கள் தொந்தரவு: கடனை செலுத்த முடியாமல் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

Bank-Employees-Harassment-The-couples-decision-to-not-pay-the-loan

பட்டுக்கோட்டை அருகே வங்கிக் கடன் தவணையை செலுத்தவில்லை எனக்கூறி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கொடுத்த தொந்தரவால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி (55). இவரது மனைவி சவரியம்மாள். சமோசா வியாபாரம் செய்து வரும் அருள்சாமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இரண்டு மாதங்களாக பெய்யும் தொடர் மழை மற்றும் கொரோனா காரணத்தால் தொழில் சரியில்லாததால் வங்கிக் கடன் தவணையை செலுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

image

இதனால், வங்கி ஊழியர்கள் போனிலும் நேரிலும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாகவும் மரியாதைக் குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதில் விரக்தியடைந்த அருள்சாமி மற்றும் சவரியம்மாள் இருவரும் நேற்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அருள்சாமியின் மகன் ஆரோக்கிய செபாஸ்டின் கொடுத்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரது உடலையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலைஎன்பதுஎதற்கும்முடிவல்ல. மனிதஉயிரைமாய்த்துக்கொள்வதற்கானஉரிமையாருக்கும்இல்லை. தற்கொலைஎண்ணம்மேலிடும்போதுஉரியஆலோசனைபெற்றால்புதியவாழ்க்கைஅவர்களுக்காககாத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவேசினேகாபோன்றதன்னார்வதொண்டுநிறுவனங்கள்சேவைஆற்றிவருகின்றன. அவர்களைதொடர்புகொண்டுஇலவசமாகஆலோசனைபெறலாம்.

சினேகாதன்னார்வதொண்டுநிறுவனம்,
எண்; 11, பார்க்வியூவ்சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசிஎண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்