Published : 26,Nov 2021 05:58 PM

வசந்தபாலனின் ‘ஜெயில்’ படத்திற்கு தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு

Studio-Green-petitions-to-ban-Vasanthabalan-and-gv-prakash-jail-miovie

இயக்குநர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

’ஜெயில்’ படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை சட்டவிரோதமாக எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் குற்றம் சாட்டியுள்ளது.

image

இதனைத்தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்-அபர்ணதி நடித்துள்ள ‘ஜெயில்’ வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்