ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாகப் படைகளை அனுப்புவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் உரையாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய போர் உத்திகள் குறித்து விவரித்தார். இந்த உரை தொலைக்காட்சி மூலமாக நேரலையாக ஒளிபரப்பானது. அப்போது‘பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் இருக்கக்கூடாது என்பதற்காகவே புதிய அணுகுமுறையை வரையறுத்திருக்கிறோம்.
யுத்தம் நடத்தி வெற்றி பெறுவதே தமது நோக்கம்’எனத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர் குறித்து, முந்தைய அதிபர்களைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த ட்ரம்ப், தற்போது அவர்களின் நடவடிக்கையைத் தொடருவதற்கு முடிவு செய்திருக்கிறார். எனினும் ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலாக எவ்வளவு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தற்போது சுமார் 8,500 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்கள்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்