[X] Close

அஜித்துக்கு ஒரு ’மங்காத்தா’ன்னா... சிம்புவுக்கு ஒரு ’மாநாடு’: நெட்டிசன்கள் விமர்சனம்

சினிமா

actor-simbu-and-director-venkat-prabhu-maanaadu-movie-netizens-review

பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து சிம்புவின் ‘மாநாடு’ வெற்றிகரமாக வெளியாகியிருக்கிறது. தியேட்டர் வாசல்களில் மாநாட்டைப்போல் திரண்டிருக்கும் கூட்டமே படம் ’ரிப்பீட்டு’ ஹிட் என்பதை உணர்த்துகிறது.

இன்று காலை வெளியான 'மாநாடு’ பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் உற்சாகமுடன் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இதோ,


FB/Kishore Kumar


Advertisement

”மாநாடு முதல்பாதி ஹாலிவுட்டும், கொரியன் சினிமாவும் அடிச்சு துவைச்ச கதை.. ஆனாலும் தலைவன் வெங்கட் பிரபு தமிழுக்கு ஏத்த மாதிரி பின்னிட்டான்”

FB/ வெங்கடேஷ் ஆறுமுகம்

"மாநாடு இப்படி ஒரு தமிழ் சினிமா இதுவரை வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. என்னா ஒரு மேக்கிங். அவசியம் தியேட்டரில் மட்டுமே போய் பார்க்கவேண்டிய திரைப்படம். வாழ்த்துகள் வெங்கட் பிரபு, சிம்பு".

Twitter/ Abdulla rawuthar

"ஒரு சமுதாயத்தின் மீதே மறுபடியும் மறுபடியும் "தீவிரவாதிகள்" என்று பச்சை குத்துறீங்களேடா" -மாநாடு. ஒரு இனத்தின் மீது மறுபடியும் மறுபடியும் "பயங்கரவாதிகள்" என்று பச்சை குத்துறீங்களேடா.!! #புலிகள்".

Twitter/ Jayam.SK.Gopi

"மாநாடு படம் பார்த்தேன். இந்து தலைவர்களுக்கும், முஸ்லீம் தலைவர்களுக்கும் ரெண்டு குருப்புக்கும் கோவம் வராத அளவுக்கு படத்தை பண்ணீட்டீங்க இயக்குநரே. வாழ்த்துகள்".

image

Twitter/ @lmvijay77___

”மாநாடு First halfல எங்கே சரிந்து விடுமோனு நினைச்சா Second Half ல வெறித்தனமா நிமிர்ந்து நிக்குது...Thumbs up.VP and STR ரெண்டு பேருக்கும் படம் நல்ல கம்பேக் Hundred points symbol. யுவன் BGMல அனல் தெறிக்குது அதுவும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கொடுத்த BGM வேற லெவல்”.

Twitter/ ஜீரோ நானே

"அமெரிக்கால ஒருத்தன் 100 பேர கொன்னா அவன் சைக்கோ, அதே ஒரு முஸ்லிம் கொன்னா அவன் தீவிரவாதியா...?". சிலம்பரசனின் இந்த "மாநாடு"ஐ "தமிழ்நாடு" கொண்டாட”

Twitter/ @iam_Tharani


"அஜித்துக்கு ஒரு ’மங்காத்தா’. சிம்புக்கு ஒரு ’மாநாடு’. வெங்கட் பிரபு
again he is proved A blockbuster director Clapping hands signSmiling face with heart-shaped eyesFolded hands”.

FB/ Logeshwari I
"ஜாங்கொ படமும் கிட்டத்தட்ட மாநாடு கதைதான். அதுல இல்லாதது மாநாடு படத்துல பக்காவா இருக்கு. மாநாடு படத்துல பட்டைய கிளப்பிய விஷயங்கள் திரைக்கதை, எஸ்.ஜே சூர்யா, சிம்பு நடிப்பு, எடிட்டிங், பிஜிஎம்.”

Twitter/ poomee twitz
”மாநாடு Str is back னு சொல்வாங்க ஆனா, வெங்கட் பிரபு is back. இந்த ஸ்டோரிக்கெல்லாம் Screen play பண்ண பத்து மூளை வேணும். அத screen la கொண்டு வர 20 மூளை வேணும் எக்கச்சக்கமான உழைப்பு.... வாழ்த்துக்கள் சாரே”.

Twitter/senthan guru Gem stone (சேந்தன் குரு)

"வந்தார்கள் பார்த்தார்கள் பிளாக் பஸ்டர் ரிப்பீட்டு..... மாநாடு Fire. வந்தார்கள் பார்த்தார்கள் பிளாக் பஸ்டர் ரிப்பீட்டு...மாநாடு Fire. வந்தார்கள் பார்த்தார்கள் பிளாக் பஸ்டர் ரிப்பீட்டு.......மாநாடு".

image

Twitter/ஊமச்சி-கூடு

"சற்று கவனக்குறைவாய் இருந்தாலும் குழப்பத்தை உண்டாக்கும் கதைக்களத்தை, நேர்த்தியான திரைக்கதையினாலும், திறைமையான தொழில்நுட்ப கலைஞர்களாலும் எவரும் புரிந்துகொள்ளும்படி ’மாநாடு’ படத்தை சிறப்பாக கொடுதித்திருக்கிறார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".

Twitter/K.K.Sekar Raja

"மாநாடு" மட்டும் திட்டமிட்டப்படி இந்த தீபாவளிக்கு வெளிவந்திருந்தது-னு வையி நம்ம "அண்ணாத்த"-க்கு அன்னைக்கே #RIP போட்டிருப்பாங்க".

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close