Published : 21,Aug 2017 12:21 PM

எட்டப்பராக மாறிவிட்டார் எடப்பாடி: புகழேந்தி

Ettapar-turned-out-to-be-an-EPS---pugazhendhi

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எட்டப்பராக மாறிவிட்டார் என்று அதிமுகவின் கர்நாடக மாநில பொறுப்பாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.

அடையாறு டிடிவி தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "தைரியம் இருந்தால் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இன்றே நீக்க முடியுமா என்று எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார். ஆட்சியில் எடப்பாடி நீடிக்க முடியுமா? முடியாதா? என்று துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பார்" என்றும் அவர் கூறினார்.

சந்தர்ப்பவாத முடிவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும், அணிகள் இணைப்பை நதிகள் இணைப்பைப் போல் பேசிக் கொள்கிறார்கள் என்றும் கூறிய புகழேந்தி, ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஒரு முடிவு தெரிந்துவிடும் என்றார். ஈபிஎஸ் ஆட்சி சரியில்லை என்று சொன்னவர்கள் எப்படி சரியானார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்