Published : 17,Nov 2021 07:29 AM
'பாட்டையா' என அழைக்கப்பட்ட எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்

பாட்டையா என அழைப்பட்ட எழுத்தாளரும் நடிகருமான கே.கே.எஸ்.மணி, வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் அருகேயுள்ள பார்வதிபுரத்தில் பிறந்தவரான இவருக்கு, வயது 84. இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த மணி, பின்னர் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களை ஏந்தினார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் ‘பாரதி’ மணி என அழைக்கப்பட்டார்.
ஒருத்தி, ஆட்டோகிராப், அந்நியன், பாபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மணி தனது அனுபவங்களை "புள்ளிகள், கோடுகள், கோலங்கள்" என தீட்டியவர். சென்னையில் அவர் உயிரிழந்த நிலையில், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனைப்படிக்க..."ஜெய் பீம் படக்குழுவிற்கு நாங்கள் துணையாக நிற்கிறோம்" - வெற்றிமாறன் ஆதரவு