திருச்சி ஓலா ஆட்டோ புக் செய்த பயணியை தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளில் பேசிய டிரைவரின் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் நேற்று(05.11.2021) திருச்சி என்.எஸ்.சி போஸ் ரோட்டில் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு தன் தாய் தந்தையுடன் சென்று உள்ளார். மீண்டும் வீடு திரும்புவதற்கு ஓலா ஆட்டோ புக் செய்துள்ளார் .
மறுமுனையில் பேசிய ஓலா ஆட்டோ டிரைவர் ராஜவேல் எவ்வளவு ரூபாய் காட்டுகிறது என கேட்ட போது 90 ரூபாய் காட்டுவதாக தர்மராஜ் குறிப்பிட்டார், அதற்கு அந்த ஓட்டுநர் 120 ரூபாய் வேணும் என கேட்டுள்ளார். தருகிறேன் என தர்மராஜ் ஒப்புக்கொண்டுள்ளார் . ஆனாலும் அவர் கோட்டைவாசல் முன்னதாக உள்ள சர்ச் வாசலில் ஆட்டோ வந்து ஏற்ற முடியாது. நீங்கள் எதிர்புறம் உள்ள 200 மீட்டர் கடந்து சாலையில் வந்து நில்லுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
என் தாய் தந்தை வயதானவர்கள் அவர்களால் நடக்க முடியாது என தர்மராஜ் குறிப்பிட , அதை ஆட்டோ ஓட்டுநர் காதில் வாங்காமல் ஆபாச வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளார். உங்களுக்கெல்லாம் எதற்கு ஓலா ஆட்டோ என அவரையும் அவர் குடும்பத்தையும் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தர்மராஜ் ஓலா ஆட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் காவல்துறைக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் ட்விட்டர் மூலம் புகார்களை அனுப்பியுள்ளார்.
மேலும், இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்கள் ஓலா ஆட்டோ புக் செய்யும்போது அவர்களிடம் ஓட்டுநர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக அதிகமான புகார்கள் வருவதாக குறிப்பிடுகிறார் தர்மராஜ். மேலும், ஓலா ஆட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கொடுத்ததற்கு அவருக்கான சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்