பெரம்பலூரில் தொடர்மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களை பாதுகாப்பாக தங்கவைக்க சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆணையர் குமரிமன்னன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் இரவு முதல் தற்போது வரை பரவலாக மழைபெய்து வருகிறது. தொடர்மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளை நகராட்சி ஆணையர் குமரிமன்னன் நேரில் ஆய்வு செய்தார். அண்ணாநகர், அரணாரை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வுசெய்த நகராட்சி ஆணையர், அங்கிருந்தவர்களை சிறப்பு முகாம்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டார்.
விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு
மேலும் அருகில் உள்ள நகராட்சி குளத்தை பார்வையிட்ட அவர், நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்துள்ளது பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க 5 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். மேலும் தேவைப்பட்டால் பள்ளிக்கட்டடங்களில் பொதுமக்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!