Published : 31,Oct 2021 03:11 PM

டி20 உலகக் கோப்பை:நமீபியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் அணி பவுலிங் தேர்வு!

T20-World-Cup-Super-12-Afghanistan-Versus-Namibia-plays-in-Abu-Dhabi

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் விளையாடுகின்றன. அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய கடைசி போட்டியில் பாகிஸ்தானை வெற்றிக்காக போராட வைத்திருந்தது. வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான். 

ஆடும் லெவன் விவரம்... 

ஆப்கானிஸ்தான்!

ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷாசாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், அஸ்கர் ஆப்கான், முகமது நபி (கேப்டன்), குல்பதின் நைப், ரஷீத் கான், கரீம் ஜனத், ஹமீத் ஹசன், நவீன்-உல்-ஹக்

நமீபியா!

கிரேக் வில்லியம்ஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜேன் கிரீன் (விக்கெட் கீப்பர்), ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வைஸ், ஜே.ஜே. ஸ்மித், ஜான் ஃப்ரைலின்க், பிக்கி யா பிரான்ஸ், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்