Published : 30,Oct 2021 02:18 PM

நீட் தேர்வு அச்சம் - பொள்ளாச்சி மாணவர் மேற்கொண்ட விபரீத முடிவு

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திவாசன். இவர் ஏற்கெனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் 4ஆவது முறையாக கடந்த மாதம் அத்தேர்வை எழுதினார். கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக கூறி வந்த கீர்த்திவாசன், இந்த முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதோ என்ற அச்சத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை விஷமருந்திய கீர்த்திவாசன் அதை தன் தாயிடம் தெரிவித்துள்ளார். உடனே கீர்த்திவாசனுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். தற்கொலை எண்ணம் எழுந்தால் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்