[X] Close

கேரளாவிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

சினிமா

actor-Sivakarthikeyan--Doctor-to-hit-housefull-shows-theaters-in-Kerala

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் கேரளாவிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இதுவரை உலகம் முழுக்க 90 கோடிக்குமேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்துள்ளது. கொரோனா சூழலிலும் குடும்பம் குடும்பமாக படத்திற்கு சென்று ஹவுஸ்ஃபுல்லாக்கி வருகிறார்கள். இதனால், தியேட்டர் உரிமையாளர்களும் லாபம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.

image


Advertisement

தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ‘டாக்டர்’ டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், கேரளாவில் கொரோனா சூழலால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் வெளியாகவில்லை. கடந்த 25 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்தது.

image

இதனால், இன்று ‘டாக்டர்’ வெளியானது. ஆனால், படக்குழு எதிர்பார்த்ததைவிட தமிழகம் போலவே, கேரள தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ‘டாக்டர்’ ஓடிக்கொண்டிருக்கிறது.

image

திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் ‘டாக்டர்’ ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதை தியேட்டர் வாசல்களில் ஹவுஸ்ஃபுல் ஃபோர்டு தொங்குவதை புகைப்படம் எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close