Published : 26,Oct 2021 08:35 PM
கள்ளக்குறிச்சி: பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து - 4 பேர் பரிதாப உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
செல்வகண்பதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு கடையின் அருகேயுள்ள பேக்கரியில் இருந்து தீப்பொறி பரவி விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துவருகின்றனர். 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.