இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, வரும் தீபாவளி அன்று ஆர்யாவின் ‘எனிமி’ வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்யாவின் 33வது திரைப்படமாக உருவாகும் இப்படம் பற்றி இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் கூறுகையில், “பொது முடக்கத்தால் பல காலமாக இயங்காமல் இருந்த திரையுலகம், மீண்டும் ஒரு புத்துணர்வுடன் இயங்குவதை பார்க்க, மிகவும் சந்தோஷமாக உள்ளது. தற்போது பல படங்கள் மிகவும் வேகமாக உருவாகி வருகிறது. திரையுலகம் உற்சாகமாக இயங்கி வருகிறது. இந்நேரத்தில் இந்தப் படத்தை தயாரிக்க பெரும் ஆர்வம் காட்டி எனது தயாரிப்பாளராக நடிகர் ஆர்யா முன்வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திரையுலகின் மிக அரிதான முத்து ஆர்யா என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
எல்லா நடிகர்களுக்கும், இயக்குநர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்குள் தங்களை புகுத்திக்கொள்ளும் திறன் இல்லை. ஆனால் ஆர்யா அப்படியில்லை. இதற்கு ஆர்யாவின் 33 படங்களும் சாட்சி, குறிப்பாக அவர் கடைசியாக நடித்த டெடி, அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை திரைப்படங்களைக் கூறலாம். அந்த வகையில் இந்த புதிய படம் கண்டிப்பாக அவருக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும்” என்றார்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!