Published : 24,Oct 2021 10:10 PM

புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் கொலை

புதுச்சேரியில் ரவுடிகள் இருவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

வாணரப்பேட்டையை சேர்ந்த பாம் ரவி என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், பாம் ரவியும், அவரது நண்பர் அந்தோணியும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 5பேர் கொண்ட கும்பல், ரவி மற்றும் அந்தோணி ஆகியோர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உடற்கூராய்வுக்காக இருவரின் உடல்களும் கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பட்டபகலில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைப்படிக்க...ஒடிசா : ஸ்மார்ட்போனுக்காக திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை விற்ற 17 வயது இளைஞர் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்