[X] Close

டி20 உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

விளையாட்டு

Australia-beat-South-Africa-in-1st-T20-of-group-12-round-in-T20-World-Cup

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

அபுதாபியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான தேம்பா பாவுமா, குயின்டன் டி காக், ராசி வான் டெர் டஸன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். டேவிட் மில்லர் 16 ரன்களுடன், ஆடம் ஜாம்பா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நிதானமாக ஆடிய ஐடன் மார்க்ராம், 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

image

ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. இதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் டக் அவுட்டானார். அதன் பின்பு டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.


Advertisement

ஆனால் மேத்யூ வேட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டியது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close