Published : 20,Oct 2021 02:12 PM

தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் சூர்யாவின் ’ஜெய் பீம்’ டிரெய்லர்

Actor-Suriya-JaiBhim-trailer-out-on-October-22-nd

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’ படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை, அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்குகிறார். ’ஜெய் பீம்’ படத்தை தயாரிப்பதோடு வழக்கறிஞராகவும் நடிக்கிறார் சூர்யா. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

image

தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின், டிரெய்லர் வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த வாரம் வெளியான ‘ஜெய் பீம்’ டீசர் இதுவரை வெளியான சூர்யா பட டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் கடந்த டீசர் என்று ( 8 மில்லியன் பார்வைகளுக்குமேல்) புதிய சாதனை செய்தது. அதோடு, யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது. தற்போது, 15 மில்லியன் பார்வைகளுக்குமேல் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் 10 வது இடத்தில் உள்ளது. இதனால், ‘ஜெய் பீம்’ டிரெய்லருக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்