தமிழகத்தில் 1,200 க்கும் கீழ் குறைந்துள்ளது கொரோனா பாதிப்பு. நேற்றைய தினம் 1,218 என்பதில் இருந்து 1,192 என இன்றைய தினம் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,26,786 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே கடந்த 24 மணி நேரத்தில் 1,423 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததை தொடர்ந்து, தற்போதைக்கு கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 14,570 என்றாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,37,802 என்றாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மேலும் 150 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி: 'அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்' - மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் மேலும் 13 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனையையும், 4 பேர் தனியார் மருத்துவமனையையும் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,912 என்றாகியுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்