Published : 13,Oct 2021 10:17 PM
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சற்றே அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று ஆயிரத்து 289 ஆக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 280 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம் 13 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
முந்தைய தினம் 18 ஆக பதிவான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 453 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 ஆயிரத்து 650 பேர் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
இதனைப்படிக்க...“தஞ்சாவூர் சாதி ஆணவப்படுகொலை மிருகத்தனமான மனிதத்தன்மையற்றது” – சீமான் கண்டனம்