Published : 04,Oct 2021 07:25 PM
சட்டப்பேரவை தேர்தலில் திமுக ரூ.114.11 கோடி, அதிமுக ரூ.57.5 கோடி செலவு: தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மொத்தமாக 180 கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தேர்தல் ஆணைய தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு செலவழித்த விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. அதில் அதிகபட்சமாக திமுக 114 கோடியே 11 லட்ச ரூபாயும், அதிமுக 57 கோடியே 5 லட்ச ரூபாயும் செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. பிராதன கட்சிகளில் பாஜக மட்டும் தேர்தல் செலவு விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதனைப்படிக்க...“நிதி பற்றாக்குறை” - எக்ஸ்ரே முடிவுகளை காகிதத்தில் எழுதி வழங்கும் அரசு மருத்துவமனை