Published : 03,Oct 2021 07:02 PM

திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: 8 பேரை அதிமுகவிலிருந்து நீக்கிய ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

OPS-EPS-removes-AIADMK-persons-who-campaigned-DMK-Party-members-for-local-body-elections

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றியதாக அதிமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று உத்தரவிட்டுள்ளனர். இதன் பின்னணியாக அவர்கள் கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டனர் என்றும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துக்கொண்டனர் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி: "நாவடக்கம் வேண்டும்" - துரைமுருகனுக்கு அதிமுக கண்டனம்

குறிப்பாக ஊரக உள்ளாட்சி தேர்த்லில், கழக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுதல் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தினாலேயே இந்நபர்கள் மீது கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை செய்யப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாகவும், இவர்களுடன் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்