[X] Close

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது வழங்கப்படும் - விருதுநகர் கலெக்டர் உத்தரவு

தமிழ்நாடு

Virudhunagar-District-Collector-has-ordered-that-liquor-be-served-in-Tasmag-stores-only-if-the-certificate-of-payment-for-the-corona-vaccine-is-shown
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம் வாங்குபவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதோருக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close