[X] Close

ஐபிஎல் 2021: பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

விளையாட்டு

RCB-KKR-teams-clash-in-today-s-match-in-IPL-cricket
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி - கேகேஆர் அணிகள் மோதுகின்றன.
 
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
 
இதற்கு முன்னதாக, ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கேகேஆர் அணி 15 முறையும், ஆர்சிபி அணி 13 முறையையும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் போட்டியில் கடைசியாக இந்த இரு அணிகளும் விளையாடியபோது, ஆர்சிபி 204 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
image
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 7 ஆட்டங்களில் ஆடி, 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி முதல் பாதியில் 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறது.
 
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
 

Advertisement

Advertisement
[X] Close