உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என யோகி ஆதித்யநாத் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையை முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் கூறுகையில்,
"பதவியேற்ற பின் 4வது முறையாக மருத்துவமனை வந்துள்ளேன். குழந்தைகள் மூளை வீக்கம் காரணமாக உயிரிழந்தனர். அதிகாரிகளிடம் நோயை கட்டுப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளேன். சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன். முழு விசாரணைக்கு பின்னர், சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் தப்பித்து விட முடியாது. குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. டெல்லியிலிருந்து மருத்துவ குழுவினர் வந்துள்ளனர். சுகாதார அமைச்சர் இங்கு வந்துள்ளனர்" என அவர் கூறினார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்