இலங்கை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 487 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ராகுல் 85 ரன்களிலும் தவான் 119 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்று தொடங்கிய 2-ம் நாள் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடி சதமடித்தார். அவர் 96 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். டெஸ்ட் போட்டியில் அவருக்கு இது முதல் சதம். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் பெர்னாண்டோ 2, புஷ்பகுமாரா 3, சண்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முகமது ஷமியின் வேகத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னேவும் (4 ரன்) தாரங்கா (5 ரன்)வும் இரையானார்கள். மெண்டிஸ் ரன் அவுட்டானார். பிறகு சண்டிமாலுடன் களமிறங்க வந்தார் மேத்யூஸ். வந்த வேகத்திலேயே அவரை எல்பிடபிள்யூ ஆக்கினார் பாண்டியா. தொடர்ந்து 4 விக்கெட்டுகள் சரிந்ததால் இலங்கை அணி திணறி வருகிறது. சண்டிமாலும் டிக்வெல்லாவும் ஆடி வருகின்றனர். அந்த அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்துள்ளது.
Loading More post
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!
”கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை நடத்துவது ஏன்?” - சிபிஐ கொடுத்த விளக்கம்!
பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு!
”போலிக்கணக்குகளின் எண்ணிக்கையை கொடுங்க; இல்லைனா ட்விட்டரை வாங்கமாட்டேன்” - எலான் மஸ்க்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்