[X] Close

சென்னையில் கன மழை: சாலைகளில் தண்ணீர்

Rain-in-Chennai

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.


Advertisement

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. மதுராந்தகத்தில் கோடையை மிஞ்சும் அளவில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மின்னலுடன் தொடங்கிய மழை, சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்துள்ளது. தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் ‌காரணமாக, காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரையில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் அப்பகுதி விசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

இந்த மழை இன்றும் தொடர்ந்தது. இன்று காலை சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழைக் கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


Advertisement

இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


Advertisement

Advertisement
[X] Close