[X] Close

சென்னை: சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக இளைஞர் போக்சோவில் கைது

குற்றம்

Chennai-A-youth-was-arrested-in-Pokso-for-cheating-a-girl-and-making-her-pregnant

திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த இளைஞரை பூவிருந்தவல்லி மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.


Advertisement

சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தில் சூர்யா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறிய சூர்யா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

image


Advertisement

இந்த நிலையில் சிறுமி கர்ப்மாக உள்ளத்தை அறிந்த அவர்களது பெற்றோர் விசாரித்ததில் சூர்யாவிற்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close