Published : 15,Sep 2021 09:30 AM

அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு: இலங்கை வீரர் லசித் மலிங்கா அறிவிப்பு

Sri-Lankan-cricketer-Lasith-Malinga-has-announced-his-retirement-from-all-forms-of-cricket
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
 
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த மலிங்கா, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும், உள்ளூரில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், டி20 உள்பட அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்துள்ளார். தனது அதிரடி யார்க்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்த மலிங்கா, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி, முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்