[X] Close

கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு: கொரட்டூரில் சோகம்

தமிழ்நாடு

One-and-a-half-year-old-child-dies-after-falling-into-well--Tragedy-in-Korattur

சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜெயந்தி (30). இவர்களுக்கு நித்திஸ்வரன் என்ற ஒன்றை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நித்திஸ்வரன் அடிக்கடி வீட்டு பின்புறம் உள்ள காலி இடத்தில் விளையாடுவது வழக்கம்.

image


Advertisement

இந்நிலையில், இன்று குழந்தை நித்திஸ்வரன் வீட்டுக்கு பின்புறம் உள்ள தரை ஒட்டிய கிணற்றுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதை பார்த்த, அவரது தந்தை சதீஷ்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

பின்னர் அவர் குழந்தையை மீட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close