[X] Close

தஞ்சாவூர்: இறந்தவரின் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து செல்லும் கிராம மக்கள்

தமிழ்நாடு

Thanjavur-It-is-a-pity-to-carry-the-body-of-the-deceased-in-neck-deep-water

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள வீரியங்கோட்டை கிராமத்தில், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பாலம் இல்லாததால் தண்ணீருக்குள் இறங்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

பேராவூரணி வட்டம் வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராக்கன் என்பவரது மகன் மகாலிங்கம். இவர் இறந்துவிட்ட நிலையில், இவரது உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் பொழுது தண்ணீருக்குள் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.

image


Advertisement

பொதுவாக இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்ததும் உடலை அடக்கம் செய்ய கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். சடத்தை சுமந்தபடி சுடுகாட்டிற்கு செல்லும் கிராமத்தினர் குறுக்கே செல்லும் கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

வாய்க்காலில் தண்ணீர் வராத நாட்களில் இறங்கி செல்லும் மக்கள் வாய்க்காலில் தண்ணீர் வரும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் பல வருடமாக வாய்க்காலுக்கு குறுக்கே பாலம் அமைத்து தரச்சொல்லி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். வாய்க்காலில் இறங்கிச் செல்லாமல் ஏற்கனவே இருக்கும் பாலத்தின் வழியாக செல்ல வேண்டுமானால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும்.

image


Advertisement

வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் மிகுந்த அச்சத்துடன் பாதுகாப்பின்றி செல்லக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close