[X] Close

புதுச்சேரி: 12ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டம்

வீடியோ ஸ்டோரி

12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.


Advertisement

துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இதனைத் தொடக்கி வைத்தனர். நியுமோகாக்கல் எனும் நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க பிசிவி எனும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நியுமோகாக்கல் நோயானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மோசமான நோய். இவ்வாறான தீவிர நோயான நியுமோகாக்கல் நோய் வராமல் தடுப்பதற்காக குழந்தைக்கு செலுத்தப்படும் தடுப்பூசியே எனும் நியுமோகாக்கல் தடுப்பூசி. இத்தடுப்பூசி செலுத்தும் பணியை தேசிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

image


Advertisement

இதனைத்தொடர்த்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, ''ரூ.12 ஆயிரம் பதிப்பிலான இந்த தடுப்பூசி தற்போது இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. புதுச்சேரியில் தற்பொது 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக புதுச்சேரி மாற வேண்டும்'' என தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close