திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில், திருப்பூரை சேர்ந்த தக்ஷனா என்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் தாய் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 4 வயதில் தக்ஷனா என்ற பெண் குழந்தை இருந்தது. தீபாவின் தாய்வீடு பூம்புகார் நகரில் உள்ளது.
இந்நிலையில், இன்று தீபா தனது குழந்தை தக்ஷனாவுடன் தனது தாய்வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆட்சியர் அலுவலகம் அருகே அவர்கள் வந்தபோது, இருசக்கர வாகனத்தின் பின்னால் மினி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. அதே இடத்தில் சாலையின் பக்கவாட்டில் கார் நிறுத்தப்பட்டிருந்த காரணத்தால் இரு சக்கர வாகனம் காரின் மீது உரசி நிலை தடுமாறி தீபாவும் தக்ஷனாவும் சாலையில் விழுந்துள்ளனர்.
இதில் மினி பேருந்தின் பின் சக்கரம் குழந்தை மற்றும் தாயின் மீது ஏறி சில அடி தூரம் இழுத்து வந்துள்ளது. இந்த விபத்தில் 4 வயது குழந்தை தக்ஷனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தாய் தீபா பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், விபத்து தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைப்படிக்க: திருவாரூர்: குப்பைக் கிடங்காக மாறிப்போன மனுநீதி சோழன் மணிமண்டபம்
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்