[X] Close

தவான் சதம்: இந்தியா ரன் குவிப்பு

India-loses-2-wickets

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்துள்ளது. தவான் சதமடித்தார்.


Advertisement

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்ட்டுகளில் இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கண்டி, பல்லகெலேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ஷிகர் தவான், கே.எல் ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராகுல், சிக்சர் அடிக்கும் முயற்சியில் அவுட் ஆனார். அவர் 85 ரன்கள் எடுத்தார். பின்னர் புஜாரா களமிறங்கியுள்ளார். சிறப்பாக ஆடிய தவான் 107 பந்துகளில் சதமடித்தார். இது, டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 6-வது சதமாகும். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர் அவுட் ஆனார். அவர் 119 ரன்கள் எடுத்தார். பின்னர் கேப்டன் கோலி களமிறங்கினார். 
இந்திய அணி சற்று முன்பு வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close