[X] Close

திருமண நிகழ்ச்சியில் 'டான்ஸ்' ஆடுவதில் தகராறு: 3 பேருக்கு கத்தி குத்து

குற்றம்

Chennai-5-people-have-been-arrested-for-stabbing-3-people-at-a-wedding

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மணமகன் தரப்பினர் 3 பேரை கத்தியால் வெட்டிய மணமகள் தரப்பினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரை சேர்ந்த இருதரப்பினரும் நடனம் ஆடி கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர் மண்டபத்தின் கழிவறை பகுதியில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

image


Advertisement

இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு தரப்பினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எதிரில் இருந்தவர்களை வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் தினேஷ், யுவராஜ், ஹேமந்த ஆகிய 3 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவத்தில் கத்தியை கொண்டு தாக்கியதாக ஆகாஷ், ஜான், தோத்து என்கிற வினோத், லொட்ட வசந்த், அப்துல் கரீம் ஆகிய 5 பேரையும் பிடித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இவர்கள் 5 பேரின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது .மேலும் போலீசாரின் விசாரணையில் இரு தரப்பினரும் வரவேற்பு நிகழ்ச்சியில் போதையில் நடனம் ஆடியபோது மோதல் ஏற்பட்டு கத்திகுத்து சம்பவம் நடந்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close