[X] Close

மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த ஜார்விஸ்: கேள்விக்குறியான வீரர்களின் பாதுகாப்பு

விளையாட்டு

This-is-the-third-time-in-the-Test-series-between-India-and-England-that-a-single-man-has-entered-the-field-raising-various-questions-about-the-safety-of-the-players
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், மூன்றாவது முறையாக ஒரே நபர் மைதானத்துக்குள் புகுந்தது, வீரர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணி வீரர்களின் சீருடை அணிந்த டேனியல் ஜார்விஸ் என்ற நபர், மைதானத்துக்குள் புகுந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அதே நபர் லார்ட்ஸ் மைதானத்துக்குள்ளும் புகுந்த நிலையில், ஹெட்டிங்கிலி மைதானத்துக்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டார்.
 
image
இந்த நிலையில், லண்டன் ஓவலில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின்போது அதே நபர் மைதானத்துக்குள் நுழைந்தார். இந்திய வீரர் உமேஷ் யாதவ் பந்துவீச தயாராக இருந்தபோது, மைதானத்துக்குள் வந்த ஜார்விஸ், இங்கிலாந்து வீரருக்கு பந்து வீசுவது போல் ஓடி வந்தார். மீண்டும் மீண்டும் ஒரே நபர், பலத்த பாதுகாப்பையும் மீறி கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close