[X] Close

நிதின் சத்யா தயாரிப்பில் பிரபுதேவாவை இயக்கும் வெங்கட் பிரபு!

சினிமா

Indian-Film-Maker-all-set-to-direct-a-Pan-India-Movie-after-directing-Maanaadu-and-Manmadha-Leelai

மாநாடு, மன்மத லீலை படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி ஆகியோர்  நடிக்கவுள்ளனர். சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் வெங்கட்பிரபு ஈடுபட்டுள்ளார். அதேபோல அசோக் செல்வன் நடிப்பில் அவர் இயக்கியுள்ள மன்மதலீலை திரைப்படத்தின் இறுதி பணிகளும் நடைபெற்று வருகின்றன. 


Advertisement

இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து நிதின் சத்யா தயாரிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். அந்த திரைப்படத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கான ஒப்பந்தங்கள் இறுதியான நிலையில் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா அல்லது ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கலாம் என கூறப்படுகிறது.  அதேபோல் அந்த படத்தை Pan India  திரைப்படமாக உருவாக்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார்.

இதையும் படிக்கலாம் : 'கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை' - 4 பதக்கங்களால் இதயங்களை கவர்ந்த சீன வீரர் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close