ரஷ்யாவுக்கு ‘வலிமை’ படப்பிடிப்புக்காகச் சென்ற அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு.
படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் ரஷ்யா சென்றிருந்தனர்.ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ’வலிமை’படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவில் அஜித் பைக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும், அஜித் ஷூட்டிங் நிறைவடைந்ததையொட்டி ரஷ்யாவில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும், மேலும் உலகம் முழுவதும் 5000 கிலோமீட்டர் பைக்கிலேயே பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின், இந்த எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!