[X] Close

நேற்றைவிட சற்று குறைவு: இந்தியாவில் புதிதாக 45,352 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா வைரஸ்

India-reports-45352-new-COVID-cases-in-the-last-24-hours
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 47,092 ஆக இருந்தது.
 
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் 32,097 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
 
அதேபோல், நாடு முழுவதும் தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,791 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close