[X] Close

உத்தராகண்ட்: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

இந்தியா

7-killed-3-bodies-recovered-after-landslide-hits-Uttarakhand

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜூம்மா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 


Advertisement

உத்தராகண்ட் மாநிலத்தில் ஜீம்மா கிராமத்தை சுற்றியுள்ள ஜம்ரி, தார்கோட் உள்ளிட்ட குக்கிராமங்களில் கனமழை பெய்ததில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

இது தொடர்பாக உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், இந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும், கிராமத்தில் குப்பை கழிவுகளில் சிக்கி 5 பேர் மூழ்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மீட்பு பணிகளை தீவிரப்படுத்த கோரி உத்தரவிட்டுள்ளேன். அங்கு சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்புக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

ஜீம்மா கிராமம் அமைந்துள்ள பிதோராகர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், கடந்த வாரம் ஜோஷி கிராமத்தில் 23வயது பெண் ஒருவர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:  கண்ணன் என் தோழன் - கண்ணனையும், பாரதியையும் பிரித்து பார்க்க முடியுமா?


Advertisement

Advertisement

Advertisement
[X] Close