மதுரையில் மேம்பால கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
மத்திய அரசின் திட்டத்தின்கீழ், 2018ஆம் ஆண்டில் மதுரை நத்தம் சாலையில் 678 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. மதுரை தல்லாகுளம் - செட்டிகுளம் இடையே 7 புள்ளி 3 கிலோ தொலைவுக்கு இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பயண நேரமும் வெகுமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் மதுரையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. நாராயணபுரம் பகுதியில் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, மேம்பால சுவர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
மேம்பால சுவரை இரு தூண்களில் இணைக்கும்போது, ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இடுபாடிகளில் சிக்கி காயமடைந்த இரண்டு தொழிலாளர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்குச் சென்றார். விபத்து குறித்து ஆட்சியர் மற்றும் பணியில் இருந்தவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்