[X] Close

50 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நாள் இன்று

விளையாட்டு

50-years-ago-Indian-Cricket-team-won-the-first-test-series-at-England-soil-on-this-day-and-this-was-victory-to-triumph

50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்த நாள் இன்று. 1932 முதல் இங்கிலாந்து நாட்டின் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. 


Advertisement

image

இதுவரை 18 தொடர்களில் இந்தியா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளன. அதில், இந்தியா 1971, 1986 மற்றும் 2007-இல் வெற்றி பெற்றுள்ளது. 2002 தொடர் சமனில் முடிந்துள்ளது. இந்த வெற்றிகள் அனைத்திற்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது ஆகஸ்ட் 19 முதல் 24 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி தான். 


Advertisement

1971 தொடரில் இந்திய அணி கேப்டன் அஜித் வடேகர் தலைமையில் விளையாடி இருந்தது. லார்ட்ஸ், ஓல்ட் டிரேவோர்ட், ஓவல் என மூன்று மைதானகளில் இந்த தொடர் நடந்திருந்தது. முதல் இரண்டு போட்டிகளும் சமனில் முடிந்தன. மூன்றாவது போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

image

image 


Advertisement

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் அஜித் வடேகர், திலீப் சர்தேசாய், குண்டப்பா விஸ்வநாத், ஃபரூக் இன்ஜினியர் மாதிரியான பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பு கொடுத்திருந்தனர். பகவத் சந்திரசேகர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

தொடரில் லீடிங் விக்கெட் டேக்கராக ஸ்ரீனிவாஸ ராகவன் வெங்கடராகவன் திகழ்ந்தார். மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அஜித் வடேகர் மொத்தம் 204 ரன்களை தொடரில் எடுத்து இருந்தார். 


Advertisement

Advertisement
[X] Close