[X] Close

புதிய வருமான வரித்துறை வலைதளத்தை சரிசெய்ய இன்ஃபோசிஸுக்கு செப்.15 வரை அவகாசம்

வணிகம்

Infosys-has-time-till-September-15-to-fix-glitches-in-income-tax-website-portal

புதிய வருமான வரித்துறை இணையதளம் ஜூன் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அந்தத் தளத்தில் இன்னும் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன. இதனால், ஆகஸ்ட் 21-ம் தேதி மீண்டும் தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தத் தளத்தை நிர்வகிக்கும் இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரிக்கு நிதி அமைச்சகம் சம்மன் அனுப்பியது.


Advertisement

இந்த நிலையில், இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் திங்கள்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது தனது அதிருப்தியை தெரிவித்த நிர்மலா சீதாராமன், செப்டம்பர் 15 வரை அவகாசம் அளிப்பதாக கூறினார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த சலீல் பரேக், 'இந்த புராஜக்ட்டில் 750-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (சி.ஒ.ஒ.) பிரவீண் ராவ் நேரடியாக மேற்பார்வை செய்கிறார்' என குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

வருமானவரி தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 30 இறுதிநாள் ஆகும். இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏற்கெனவே ஜிஎஸ்டி தளத்தை வடிவமைத்தது. அதிலும் சிக்கல்கள் இருந்தன. தற்போது வருமான வரித்துறை தளத்திலும் சிக்கல் ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close