கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க சயன், மனோஜ் ஆகியோர் திட்டமிடுவதாக காணொலி ஒன்று அதிமுக அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதீப் என்பவர், சயன் மற்றும் மனோஜிடம் கோடநாடு வழக்கில், ஈபிஎஸ், ஓபிஎஸை சேர்ப்பது குறித்து பேசுவது அந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் சிக்க வைப்பது குறித்து அவர்கள் பேசுகின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே கோடநாடு வழக்கிலிருந்து சயன், மனோஜ் தப்ப முடியும் என அவர்கள் பேசுவது வீடியோவிலுள்ளது. இந்த வீடியோவிலுள்ள பிரதீப் என்பவர் டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலின் பிரதிநிதி என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடநாடு வழக்கு -
“டெல்லி பத்திரிக்கையாளர்” என இந்த காணொலியில் அடையாளம் காட்டபடுகிற மேத்யூஸ் சாமுவேலின் பிரதிநிதியான பிரதீப் என்பவர் தொடர் குற்றவாளிகள் சயன் & மனோஜ் ஆகியோரிடம் மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர்கள் @OfficeOfOPS & @EPSTamilNadu இருவரையும் கோடநாடு வழக்கு - சயன்-மனோஜ் 1/2 pic.twitter.com/QOijQ82onm— AIADMK (@AIADMKOfficial) August 22, 2021Advertisement
இது குறித்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலிடம் கேட்டதற்கு, தனக்கும் அந்த வீடியோவிற்கும் தொடர்பில்லை என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தன்னை இணைத்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!